ஆங்கில பாடப் பயிற்சி 2 : Grammar Patterns 2

ஆங்கில பாடப் பயிற்சி 2 : Grammar Patterns 2

Size
Video tutorial by:

Study more »


ஆங்கில பாடப் பயிற்சி - 2 (Grammar Patterns 2)


முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி.

இன்றையப் பாடம் நாம் முதல் பாடத்தில் கற்ற "ஆங்கில பாடப் பயிற்சி-1" - றைப் போன்றே இருந்தாலும், இதில் சில இலக்கங்களின் போது சில மாற்றங்கள் உள்ளன.I உடன் am இணைந்து வந்திருந்தது.

He, She, It போன்ற "Third Person Singular" உடன் "is " இப்பாடத்தில் இணைந்து வருகின்றது.

அதனைத் தொடர்ந்து 1, 7, 8, 13, 16, 18, 27, 37, 38, 39, 56, 60, 61, 64, 71 போன்ற இலக்கங்களின் போதும் சில இலக்கண மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை அவதானித்து பயிற்சிச் செய்யுங்கள்.
இன்று நாம் "speak in English" எனும் ஒரு வார்த்தையை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். முதல் பாடத்தில் "நான்" (I) என்பதற்கு பதிலாக, இப்பாடத்தில் "அவன்" (He) இட்டுக்கொள்வோம். இவ்வார்த்தையின் முறையே "He speaks in English - அவன் பேசுகின்றான் ஆங்கிலத்தில், He spoke in English - அவன் பேசினான் ஆங்கிலத்தில், He wiil speak in English - அவன் பேசுவான் ஆங்கிலத்தில்" என ஒரே வாக்கியத்தை 73 மூன்று வாக்கியங்களாக மாற்றி பயிற்சி செய்யப் போகின்றோம்.

speak in English

1. He speaks in English.
அவன் பேசுகின்றான் ஆங்கிலத்தில்.

2. He is speaking in English.
அவன் பேசிக்கொண்டிருக்கின்றான் ஆங்கிலத்தில்.

3. He spoke in English.
அவன் பேசினான் ஆங்கிலத்தில்.

4. He didn't speak in English.
அவன் பேசவில்லை ஆங்கிலத்தில்.

5. He will speak in English.
அவன் பேசுவான் ஆங்கிலத்தில்.

6. He won’t speak in English.
அவன் பேசமாட்டான் ஆங்கிலத்தில்.

7. Usually he doesn't speak in English.
சாதாரணமாக அவன் பேசுகின்றானில்லை ஆங்கிலத்தில்.

8. He is not speaking in English.
அவன் பேசிக்கொண்டிருக்கின்றானில்லை ஆங்கிலத்தில்.

9. He was speaking in English.
அவன் பேசிக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில்.

10. He wasn't speaking in English.
அவன் பேசிக்கொண்டிருக்கவில்லை ஆங்கிலத்தில்.

11. He will be speaking in English.
அவன் பேசிக்கொண்டிருப்பான் ஆங்கிலத்தில்.

12. He won’t be speaking in English.
அவன் பேசிக் கொண்டிருக்கமாட்டான் ஆங்கிலத்தில்.

13. He is going to speak in English.
அவன் பேசப்போகின்றான் ஆங்கிலத்தில்.

14. He was going to speak in English.
அவன் பேசப்போனான் ஆங்கிலத்தில்.

15. He can speak in English.
16. He is able to speak in English.
அவனுக்கு பேச முடியும் ஆங்கிலத்தில்.

17. He can’t speak in English.
18. He is unable to speak in English.
அவனுக்கு பேச முடியாது ஆங்கிலத்தில்.

19. He could speak in English.
20. He was able to speak in English.
அவனுக்கு பேச முடிந்தது ஆங்கிலத்தில்.

21. He couldn't speak in English.
22. He was unable to speak in English.
அவனுக்கு பேச முடியவில்லை ஆங்கிலத்தில்.

23. He will be able to speak in English.
அவனுக்கு பேச முடியுமாக இருக்கும் ஆங்கிலத்தில்.

24. He will be unable to speak in English.
அவனுக்கு பேச முடியாமலிருக்கும் ஆங்கிலத்தில்.

25. He may be able to speak in English.
அவனுக்கு பேச முடியுமாக இருக்கலாம் ஆங்கிலத்தில்.

26. He should be able to speak in English.
அவனுக்கு பேச முடியுமாகவே இருக்கும் ஆங்கிலத்தில்.

27. He has been able to speak in English.
சற்று முன்பிருந்து /கிட்டடியிலிருந்து அவனுக்கு பேச முடியுமாக இருக்கின்றது ஆங்கிலத்தில்.

28. He had been able to speak in English.
அன்றிலிருந்து /அக்காலத்திலிருந்து அவனுக்கு பேச முடியுமாக இருந்தது ஆங்கிலத்தில்.

29. He may speak in English.
30. He might speak in English.
31. He may be speaking in English.
அவன் பேசலாம் ஆங்கிலத்தில்.

32. He must speak in English.
அவன் பேச வேண்டும் ஆங்கிலத்தில். (கட்டாயம்/அழுத்தம்)

33. He must not speak in English.
அவன் பேச வேண்டியதில்லை ஆங்கிலத்தில் (அழுத்தம்)
அவன் பேசக் கூடாது ஆங்கிலத்தில்.

34. He should speak in English.
அவன் பேசவே வேண்டும் ஆங்கிலத்தில். (மிக அழுத்தம்)

35. He shouldn't speak in English.
அவன் பேசவே வேண்டியதில்லை ஆங்கிலத்தில். (மிக அழுத்தம்)
அவன் பேசவே கூடாது ஆங்கிலத்தில்.

36. He ought to speak in English.
அவன் எப்படியும் பேசவே வேண்டும் ஆங்கிலத்தில். (மிக மிக அழுத்தம்)

37. He doesn't mind speaking in English.
அவனுக்கு ஆட்சேபனை இல்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

38. He has to speak in English.
அவன்/அவனுக்கு பேச வேண்டும் ஆங்கிலத்தில்.

39. He doesn’t have to speak in English.
அவன்/அவனுக்கு பேச வேண்டியதில்லை ஆங்கிலத்தில்.

40. He had to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்பட்டது ஆங்கிலத்தில்.

41. He didn’t have to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்படவில்லை ஆங்கிலத்தில்.

42. He will have to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்படும் ஆங்கிலத்தில்.

43. He won’t have to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்படாது ஆங்கிலத்தில்.

44. He needs to speak in English.
அவனுக்கு அவசியம் பேச வேண்டும் ஆங்கிலத்தில்.

45. He needn't to speak in English.
45. He doesn't need to speak in English.
அவனுக்கு அவசியமில்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

46. He seems to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரிகின்றது ஆங்கிலத்தில்.

47. He doesn't seem to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரிகின்றதில்லை ஆங்கிலத்தில்.

48. He seemed to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரிந்தது ஆங்கிலத்தில்.

49. He didn't seem to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரியவில்லை ஆங்கிலத்தில்.

50. Speaking in English is useful.
பேசுவது(தல்) ஆங்கிலத்தில் பிரயோசனமானது.

51. Useless speaking in English.
பிரயோசனமில்லை பேசுவது(தல்) ஆங்கிலத்தில்.

52. It is better to speak in English.
மிக நல்லது பேசுவது ஆங்கிலத்தில்.

53. He had better speak in English.
அவனுக்கு மிக நல்லது பேசுவது ஆங்கிலத்தில்.

54. He made her speak in English.
அவன் அவளை வைத்து பேசுவித்தான் ஆங்கிலத்தில்.

55. He didn't make her speak in English.
அவன் அவளை வைத்து பேசுவிக்கவில்லை ஆங்கிலத்தில்.

56. To speak in English.He is practicing.
பேசுவதற்கு ஆங்கிலத்தில் அவன் பயிற்சி செய்துக்கொண்டிருக்கின்றான்.

57. He used to speak in English.
அவன் பழக்கப்பட்டிருந்தான் பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

58. Shall I speak in English?
நான் பேசவா ஆங்கிலத்தில்?

59. Let’s speak in English.
பேசுவோம் ஆங்கிலத்தில்.

60. He feels like speaking in English.
அவனுக்கு நினைக்கின்றது பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

61. He doesn't feel like speaking in English.
அவனுக்கு நினைக்கின்றதில்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

62. He felt like speaking in English.
அவனுக்கு நினைத்தது பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

63. He didn't feel like speaking in English.
அவனுக்கு நினைக்கவில்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

64. He has been speaking in English.
சில காலமாக/கிட்டடியிலிருந்து அவன் பேசிக்கொண்டிருக்கின்றான் ஆங்கிலத்தில்.

65. He had been speaking in English.
அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து அவன் பேசிக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில்.

66. I see him speak in English.
எனக்கு தெரிகின்றது அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

67. I don’t see him speak in English.
எனக்கு தெரிகின்றதில்லை அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

68. I saw him speak in English.
எனக்கு தெரிந்தது அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

69. I didn't see him speak in English.
எனக்கு தெரியவில்லை அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

70. If he speaks in English, he will get a good job.
அவன் பேசினால் ஆங்கிலத்தில் அவனுக்கு கிடைக்கும் ஒரு நல்ல வேலை.

71. If he doesn't speak in English, he won’t get a good job.
அவன் பேசாவிட்டால் ஆங்கிலத்தில் அவனுக்கு கிடைக்காது ஒரு நல்ல வேலை.

72. If he had spoken in English, he would have got a good job.
அவன் பேசியிருந்தால் ஆங்கிலத்தில், அவனுக்கு கிடைத்திருக்கும் ஒரு நல்ல வேலை.(பேசவும் இல்லை கிடைக்கவும் இல்லை)

73. It is time he spoke in English.
இது தான் நேரம் அவன் பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

கவனத்திற்கு:

1. உதாரணமாக மேலே இன்று நாம் கற்றப் பாடத்தில் முதலாவது வாக்கியத்தைக் கவனியுங்கள். அதில் "He speaks in English" "என்றுள்ளது. அதில் "speak" எனும் சொல்லுடன் "s" எழுத்தும் இணைந்து வந்துள்ளதை அவதானித்திருப்பீர்கள். அதாவது "Third Person Singular" சாதாரண நிகழ் காலத்தில் He, She, It உடன் வரும் பிரதான வினைச்சொற்களோடு s, es எனும் எழுத்துக்களும் இணைந்தே வரும் என்பதை மறவாதீர்கள்.

Third Person Singular "He, She, It: Infinitive + e, es" அட்டவணை பார்க்கவும்.

2. மற்றது "speak in English" எனும் வார்த்தை சில இலக்கங்களின் போது "speaking in English" என்று வந்துள்ளதை அவதானிக்கவும்.

Verb with + ing: 2, 8, 9, 10, 11, 12, 31, 37, 46, 47, 48, 49, 50, 51, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69.

இவ்விலக்கங்களின் போது எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் "ing" யும் இணைந்தே பயன்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

உதாரணம்:

speak in English
speaking in English. என்று "ing" யும் இணைந்து வரும்.

Homework:

He drives a car.
அவன் ஓட்டுகின்றான் மகிழூந்து.

She goes to school.
அவள் போகின்றாள் பாடசாலைக்கு.

Sarmilan gets up early morning.
சர்மிலன் எழுத்திருக்கின்றான் அதிகாலையில்.

Nithya comes to the office.
நித்யா வருகின்றாள் அலுவலகத்திற்கு.

He apologizes with her.
அவன் மன்னிப்பு கோருகின்றான் அவளிடம்.

My mother opens a current account.
எனது தாயார் திறக்கின்றார் ஒரு நடைமுறைக் கணக்கு.

இவற்றை மேலே நாம் கற்றதைப் போன்று ஒவ்வொரு வாக்கியங்களையும் 73 வாக்கியங்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யுங்கள்.

இப்பாடத் திட்டம் பாடசாலை ஆங்கிலப் பாடத்திட்டம் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி புத்தகங்களில் (Spoken English) போன்றோ அல்லாமல் மிக மிக இலகுவான ஒரு பாடப் பயிற்சி முறையாகும்.

மற்றும் மேலே குறிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு இலக்கங்களும், ஒவ்வொரு பாடங்களாக எதிர்வரும் பாடங்களில் விரிவடையும். அப்போது அதனதன் பயன்பாடுப் பற்றியும், இலக்கண விதிமுறைகள் பற்றியும் மேலும் விரிவாக கற்கலாம்.

சரி பயிற்சிகளை தொடருங்கள்.

மீண்டும் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.

இப்பாடத்திட்டம் பற்றிய உங்கள் கருத்துக்களையும், எண்ணங்களையும் எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் ஊடாகவோ, மின்னஞ்சல் ஊடாகவோ கேட்டுக்கொள்ளலாம்.

நன்றி!

அன்புடன்
www,agaram.lkelcome to aangilam.blogspot.com

0 Reviews

Contact form

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *