தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விளக்கங்கள்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விளக்கங்கள்

Size
Video tutorial by:

Study more »


N.THANANJEYAN (SLAS)
Provincial Director
Department of Rural Development - EPC


சட்ட அமுலாக்கம்


1.அரசியலமைப்பு 
    உறுப்புரை இல:14 (அ)- தகவலை அறியும் உரிமை. ( 19ம் திருத்தம்)

2.சட்டம்
    சட்ட இல: 12, 2016- தகவலறியும் உரிமைச் சட்டம்

3.ஒழுங்கு விதிகள்
    வர்தமானி இல: 2004/66 – 02.03.2017 
     RTI சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் 

4.சுற்றறிக்கை 
   சுற்றரிக்கை இல: RTI/01/2016
   RTI சட்டத்தின் ஏற்பாட்டின் கீழ் வெளிப்படுத்துகை
   சுற்றறிக்கை இல: MNPEA 04/2018
   அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பான முன்னோடித் தகவல்களின்          வெளிப்படுத்துகை.


தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்றால் என்ன ?

ஒவ்வொரு பிரசையும்
  பகிரங்க அதிகாரசபையின்
  உடைமையில், கட்டுக்காப்பில் அல்லது கட்டுப்பாட்டில் இருக்கின்ற தகவல்
  தகவல் பெறுவதற்கான உரிமை.


பிரசை என்பது :

பிறப்பினால் அல்லது பதிவினால் பிரசாவுரிமை பெற்றவர்கள், கூட்டிணைக்கப்பட்ட அல்லது கூட்டிணைக்கப்படாத உறுப்புரிமையின் முக்கால் பங்கினராக பிரசைகளைக் கொண்ட அமைப்புக்கள் பிரசைகள் ஆவர்.


பெறக்கூடிய தகவல்கள் (பிரிவு 43)


records
documents
memos
emails
opinions
advices
press releases
circulars
orders
log books
contracts
reports
papers
samples
models
correspondence
memorandum
draft legislation
book
plan
map
drawing
diagram
pictorial or graphic work
photograph
film
microfilm
sound
recording
video tape
machine readable record
computer records
and other documentary material

பகிரங்க அதிகாரசபை குறிப்பிடுவது – ( பிரிவு 43)

1) அமைச்சு
2) அலுவலகம்
3) அரச திணைக்களங்கள்
4) பொதுக் கூட்டுத்தாபனம்
5)  கம்பனிகள்
6)  உள்ளுராட்சி சபைகள்
7)  Pசiஎயவந நுவெவைல
8)  திணைக்களங்கள், அதிகாரசபைகள், நிறுவனங்கள்
9)  ஆரச சார்பற்ற அமைப்புக்கள்
10)  ஊயர் கல்வி நிறுவனங்கள்
11)  பிரத்தியேக கல்வி நிறவனங்கள், தொழில்சார், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள்
12)  நீதிமன்றங்கள், இணக்க சபைகள்

 தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் குறிக்கேள்

அரசியலமைப்பு உறுப்புரை 14 அ (19வது திருத்தச் சட்டம்) 
தகவலைப்பெற அணுகுதலுக்கான உரிமையை உத்தரவாதம் செய்கின்றது 
இதன் மூலம் 

  • பகிரங்க அதிகாரசபைகளின் வெளிப்படைத்தன்மையினைப் பேணிவளர்த்தல்
  • ஊழலை எதிர்த்து நிற்றல் 
  • பொறுப்புக்கூறும் தன்மையினை மேம்படுத்துதல் 
  • (பங்கேற்பு) நல்லாட்சியை மேம்படுத்துதல்

தகவலுக்கான உரிமை - வரலாறு

இலங்கை சார்க் வலயத்தில்தகவலுக்கானஉரிமை பற்றிய சட்டமொன்றைக் கொண்டிராத ஒரே நாடாக இருப்பினும் இலங்கையில் இவ்வாறான சட்டமொன்றைக் கொண்டுவர வேண்டியதன் தேவைப்பாடு பற்றிய உரையாடல்கள் 1994 ஆம் ஆண்டு வரை நீண்டு செல்வதைக் காணலாம்.
குறிப்பாக1994 பொதுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியை ஆதரி்த்த ஊடக அமைப்புக்களும் சிவில் அமைப்புக்களும் தேர்தல் களத்தில் அதுபற்றிப் பேசியிருந்தன. 1994 ஆம் ஆண்டில் தகவல் சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயக்கவினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் ஊடாகக் கொள்கை என்னும் விஞ்ஞாபனம் இது பற்றிய எழுத்திலான முதலாவது ஆவணமாகும்.

ஆகவே இலங்கையில்1994 இல் ஆரம்பமானதகவலுக்கானஉரிமை பற்றிய சட்டம் தொடர்பானகலந்துரையாடல்களின் தொடர்ச்சியை இக்குறிப்பு தாங்கி வருகின்றது.

தகவலுக்கான உரிமையை அடிப்படை உரிமையாக அரசியலமைப்பில் உள்வாங்க வேண்டுமென 1994 ஆம் ஆண்டில் முதல் முறையாக கொள்கை ரீதியான தீர்மானம் vLf;fg;gl;lJ.
1994 ஒக்ரோபர்10 ஆம் திகதி தகவல் சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயக்கவினால் அமைச்சரவை நிருபம் ஒன்றின் மூலம் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் ஊடாகக் கொள்கை பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இரண்டாவது வி்டயமாக தகவலுக்கான உரிமையை பரந்தளவில் அங்கீகரிப்பதாகவும் அதற்கென அரசியலமைப்பு ரீதியான அந்தஸ்தினை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரசியலமைப்பில் சிவில் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ளவாறு கருத்து தெரிவித்தற் சுதந்திரத்தில் தகவலுக்கான உரிமையும் உள்ளடக்கப்படுதல் வேண்டும்பரிந்துரை இல. 03.

தகவலதிகாரி


பொது அதிகார சபைகளில் காணப்படும் தகவல் அலுவலரே தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் ஒன்று கோரப்படும் போது அதனை வழங்கவேண்டிய பொறுப்புடையவர் ஆவார்.

தகவல் அலுவலர் தமது ஏனைய பணிகளிலும் பார்க்க தகவலுக்கான உரிமைச் சட்டம் சார்ந்த கடமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவர்களது கடமையாகும்.

தகவல் அலுவலர் பிரசன்னமாகாத வேளை, குறித்த அலுவலகத்தின் தலைவர் தகவல் அலுவலரின் கடமைகளை மேற்கொள்ள கடமைப்பட்டவர் ஆவார்.

குறித்தளிக்கப்பட்ட அதிகாரி


உங்களால் கோரப்பட்ட தகவலானது தகவல் அதிகாரியினால் மறுக்கப்படும் சர்ந்தப்பத்தில் அதற்கு எதிரான மேன்முறையீட்டைக் கையாளுகின்ற அதிகாரி.

பிரஜை ஒருவர் தகவல் அலுவலரின் தீர்மானத்தில் திருப்தியுறாவிட்டால் அத்தீர்மானம் தொடர்பில் செய்யப்படுகின்ற மேன்முறையீட்டைக் கையாளுகின்ற அதிகாரி

இவர் தகவலதிகாரியின் தீர்மனத்திற்கு எதிரான மேன்முறையீட்டினை பரிசீரலித்து முடிவினை வழங்குவார் 
 தகவலுக்கான ஆணைக்குழு
குறித்த ஆணைக்குழுவானது 5 பேர் கொண்ட குழுவாகும்.

இவர்கள் பொருத்தமான அறிவு, அனுபவம் மற்றும் அரச ஆட்சி, பொது நிர்வாகம், சமூக சேவை, பத்திரிகைத்துறை, விஞ்ஞான தொழில் நுட்பம் மற்றும் முகாமைத்துவம் போன்ற துறைகளில் நிபுணத்துவமும் கொண்டிருக்கவேண்டும்.

ஆணைக்குழுவானது தன்னகத்தே அதிகளவிலான அதிகாரங்களை கொண்டிருப்பதோடு, பொதுமக்கள் எந்தவொரு தங்கு தடையுமற்று தகவலுக்கான உரிமையை அனுபவிப்பதை உறுதி செய்யவும் பொறுப்புடையதாகும்.

தகவலுக்கான ஆணைக்குழுவின் தொடர்பு விபரங்கள் 
அறை இல: 203-204
பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டப வளாகம்
பௌத்தாலோக மாவத்தை
கொழும்பு 7
தொலைபேசி : (+94)  0112691625

மின்னஞ்சல் : rti.commission16@gmail.com0 Reviews

Contact form

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *